ரம்மி – சீட்டு விளையாட்டு

getmega
Language Slug
English rummy-the-card-game
हिंदी rummy-the-card-game-hindi
ગુજરાતી rummy-the-card-game-gujarati
తెలుగు rummy-the-card-game-telugu
தமிழ் rummy-the-card-game-tamil
मराठी rummy-the-card-game-marathi

Table of content:

இந்தியாவில் பலரால் விளையாடப்படும் மனதிற்கு நெருக்கமான சீட்டு விளையாட்டாகும் ரம்மி. உங்கள் நண்பர்களுடன் நீங்கள் விளையாடவும், அதன் விதிகளை அறியவும் விரும்புகிறீர்களா? இக்கட்டுரையில் கெட்மெகா ரம்மியைக் குறித்த சிந்தனையையும் அதன் அடிப்படை விதிகளையும் அறிய உங்களுக்கு உதவும்.
கெட்மெகா உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் காணொலி மூலம் உண்மையான ரொக்கத்துடன் விளையாட அனுமதிக்கும் அற்புதமான தளமாகும். வேடிக்கையாக இருக்கிறது? அல்லவா? செயலியை இப்போதே பதிவிறக்கம் செய்யவும்!

GetMega is an amazing platform that lets you play with friends & family on video-chat with real money.
Sounds fun, isn't it? Download the app now!

ரம்மி என்றால் என்ன?

ரம்மி என்பது ஒத்த சூட்டில் அதே ரேங்கிலோ அல்லது வரிசையிலோ ஜோடிகளை சேர்க்கும் சீட்டு விளையாட்டாகும்

ரம்மி சீட்டு விளையாட்டில் பல்வேறு வகைகள் உண்டு. ரம்மி விளையாட்டு வகைகளில் அடிப்படை குறிக்கோள் ஜோடிகளை (மெல்ட்ஸ் என அழைக்கப்படுகின்றன) அமைப்பதாகும். இந்த சேர்க்கை (மெல்ட்ஸ்) ஒரு ஜோடியாகவோ (3 அல்லது 4 ரேங்க் சீட்டுக்கள் கொண்டது) அல்லது ரன்னாகவோ (ஒத்த சூட்டின் மூன்று அல்லது அதற்கு மேலான தொடர் சீட்டுகள்) இருக்கலாம்.

இந்திய ரம்மி சீட்டு விளையாட்டு ஏதேனும் ஒரு வகையில் ஜின் ரம்மி மற்றும் 500 ரம்மியை ஒத்தது. இரண்டு விளையாட்டுகளும் அமெரிக்காவில் தோன்றியவை.

ரம்மியை எப்படி விளையாடுவது?

இப்பிரிவில் எந்தவொரு ரம்மி வகை விளையாட்டின் அடிப்படைகளையும் விளக்கலாம், நீங்கள் ரம்மி விளையாட்டிற்கு புதிது என்றால் ரம்மியின் அடிப்படை விதிகளுடன் அதை அறிந்துக்கொள்ள நாங்கள் உதவுகிறோம்.

ரம்மி விளையாடுவது எப்படி

ரம்மியின் பண்புகள்

  • வழக்கமான 52 விளையாடும் சீட்டுகளுடன் கூடிய கட்டுகள் பயன்படுகின்றன. இந்திய ரம்மியில் 2 கட்டுகள் பயன்படுகின்றன.
  • இங்கு 2 என்பது குறைந்தபட்சமானதாகும்.
  • ஏஸ் உயர் ரேங்கிலும் (க்யூ,கே=ஏஸ்) குறைந்த ரேங்கிலும் (ஏஸ்,2,3,4) என இரண்டிலும் விளையாடப்படலாம்.
  • ரம்மியை 2-6 ஆட்டக்காரர்களால் விளையாடப்படும்
  • ஆட்டத்திற்கு முன்பு ஆட்டக்காரர்களால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விளையாட்டுகளையோ அல்லது குறிப்பிட்ட ஸ்கோரையோ இலக்காக கொண்டு முடிவு செய்யலாம்.
  • நீங்கள் சீட்டுக்களை சேர்க்க வேண்டும். அதாவது சீட்டுக்களை ரன்கள் அல்லது ஜோடிகளாக இணைக்க வேண்டும் (இதை தனிப் பிரிவில் நாங்கள் எழுதியுள்ளோம்)
  • ஒரு சீட்டை உங்கள் முறை வரும்போது சீட்டை எடுக்கவோ அல்லது வெளியேற்றவோ இயலும்.
  • இதர ஆட்டக்காரர்கள் முன்பு சீட்டுக்களை இணைப்பதே இலக்காக இருக்கும் – அதைக்கொண்டு நீங்கள் வெற்றி பெறலாம்.

விளையாட்டின் பொருள்

நீங்கள் கொண்டிருக்கும் ஆட்டத்தினை மேம்படுத்த வேண்டும். இதைச் செய்ய உங்கள் முறை வரும்போது பைல்லில் இருந்து சீட்டுக்களை எடுக்கவோ அல்லது உங்கள் எதிர் ஆட்டக்காரர்களால் இறக்கப்படும் சீட்டினை எடுக்கவோ வேண்டும். உங்களது கைகளில் உள்ள சீட்டுக்களின் எண்ணிக்கையை பராமரிக்க நீங்கள் ஒரு சீட்டினை இறக்க வேண்டும்.

ரம்மியில் உள்ள ஆட்டக்காரர்களின் எண்ணிக்கை

2-6 ஆட்டக்காரர்களால் ரம்மி விளையாட முடியும். ஒவ்வொரு ஆட்டக்காரருக்கு கிடைக்கும் சீட்டுக்களின் எண்ணிக்கை எந்த ரம்மி வகையை விளையாடுகிறார்கள் என்பதைச் சார்ந்தது. அதைக் கீழேயுள்ளபடி காணலாம்:-

வீரர்களின் எண்ணிக்கை கொடுக்கப்பட்ட அட்டைகளின் எண்ணிக்கை
2 வீரர்கள் 10 அட்டைகள்
3 அல்லது 4 வீரர்கள் 7 அட்டைகள்
5 அல்லது 6 வீரர்கள் 6 அட்டைகள்

ஆறு ஆட்டக்காரர்கள் இருந்தால் இரண்டு சீட்டுக்கட்டுகள் தேவை. இருப்பினும் ரம்மி விளையாட்டின் விதிகள் ஒன்றேதான். இந்திய ரம்மி விளையாட்டில் ஒவ்வொரு ஆட்டக்காரரும் 13 சீட்டுகளைப் பெறுவார்கள். இரண்டு ஆட்டக்காரர்களுக்கு 2 சீட்டுக்கட்டுகள் பயன்படும். இரண்டு ஆட்டக்காரர்களுக்கு மேல் என்றால் 3 சீட்டுக்கட்டுகள் பயன்படும்.

டிஸ்கார்ட் பைல்

ஆட்டக்காரர்களால் இறக்கப்படும் சீட்டுகள் டிஸ்கார்ட் பைல்லில் இருக்கும் (சீட்டின் மதிப்பு தெரியும்படி திறந்திருக்கும்) நீங்கள் டிஸ்கார்ட் பைல்லில் இருந்தும் சீட்டுக்களை எடுத்துக்கொள்ளலாம்.

ரம்மியில் சேர்க்கை

சீட்டுக்களை ரன்களாகவோ அல்லது ஜோடிகளாகவோ இணைப்பதே ரம்மியில் சேர்க்கை என அழைக்கப்படுகிறது.

ஒரே சூட்டில் வரிசையாக (ரன்) உங்களிடம் மூன்று அல்லது நான்கு சீட்டுகள் இருந்தால் இணைக்கலாம். அல்லது வெவ்வேறு சூட்களில் (ஜோடி) ஒரே ரேங்கில் இணைக்கலாம். இப்படி இணைப்பதன் மூலம் நீங்கள் இந்தச் சீட்டுக்களை எதிர் ஆட்டக்காரர்களின் பார்வைக்கு திறந்தநிலையில் வைக்கலாம்.

எடுத்துக்காட்டுகள்:-

ஜோடி - 2♦ 2♥ 2♣ 2♠
ரன் - A♠ 2♠ 3♠

ரம்மி விதிகள்

இந்தப் பிரிவில் ரம்மி விளையாட்டின் விதிகளை நாங்கள் கூறுகிறோம்.

விளையாட்டின் துவக்கத்தில்

  • ஒவ்வொரு ஆட்டக்காரரும் ஒரு சீட்டினை எடுக்கிறார்கள். குறைந்த மதிப்புடைய சீட்டை எடுக்கும் ஆட்டக்காரர் முதலில் விளையாடுகிறார்.
  • ஆட்டமானது கடிகாரச் சுற்றின்படி நிகழ்கிறது.
  • வழக்கமாக துவக்கும் ஆட்டக்காரரின் வலது புறம் உள்ளவர் சீட்டை வெட்ட வேண்டும். (இது கட்டாயம் கிடையாது. வாய்ப்பிருந்தால் செய்யலாம்).
  • துவக்க ஆட்டக்காரரின் இடது புறமிருந்து கடிகாரச் சுற்றின்படி சீட்டுக்கள் கொடுக்கப்படுகின்றன.
  • சீட்டுக்கள் ஒருமுறைக்கு ஒரு சீட்டு என்ற அடிப்படையில் கொடுக்கப்படுகின்றன. சீட்டுக்கள் தலைகீழாக ஆட்டக்காரர்கள் யாரும் காண இயலாத வகையில் இருக்க வேண்டும்.
  • மீதமுள்ள சீட்டுக்கள் தலைகீழாக மறைத்து வைத்த நிலையில் நடுவில் வைக்கப்படுகின்றன. இதுதான் ஸ்டாக்பைல்.
  • சீட்டு அடுக்கின் அருகாமையில் ஒரு சீட்டானது திறந்த நிலையில் வைக்கப்படும். இதுதான் டிஸ்கார்ட் பைல்.

ரம்மி சீட்டு விளையாட்டின் போது

  • நீங்கள் டிஸ்கார்ட்பைல்லில் இருந்து சீட்டை எடுத்தால் அதை வைத்துக்கொள்ள வேண்டும்.
  • நீங்கள் தவறுதலாக ஸ்டாக்பைல்லில் இருந்து இரண்டு சீட்டுக்களை எடுத்து விட்டால்- அதில் ஒன்றைப் பார்த்துவிட்டால் அடியிலுள்ள சீட்டினை போடவும். அடுத்த ஆட்டக்காரருக்கு அதைப்பார்க்கும் வாய்ப்பு கிட்டும். அவருக்கு அச்சீட்டு தேவை என்றால் எடுத்துக்கொள்ளலாம். இல்ல்லையென்றால் ஸ்டாக்பைல்லின் நடுவே அதை வைத்து விட்டு, அடுத்த சீட்டை எடுத்துக் கொள்ளலாம்.

டிப்ஸ் – ஸ்டாக்கிலிருந்து எடுத்த சீட்டை கீழே போட வேண்டாம். அதைப் பின்னர் இறக்குவதற்கு வைத்துக்கொள்ளுங்கள். இப்படிச் செய்வது இதர ஆட்டக்காரர்கள் உங்கள் கைகளிலுள்ள சீட்டுக்களைப் பற்றி அறிந்துக் கொள்வதைத் தடுக்கும்.

Excited to play rummy?
GetMega is India's favorite Rummy app with best in class interface and real players. With 10,000+ daily players on the app, you can win up-to Rs 1,00,000 everyday. Download the GetMega Rummy now!

ஸ்கோரிங்

முதலில் நாங்கள் ஸ்கோரிங் அளவீடுகளை விவரித்து விட்டு பின்னர் ஸ்கோரிங் விதிகளை விரிவாக விளக்குவோம்.

ஸ்கோரிங் அளவீடுகள்

ரம்மியில் ஒவ்வொரு சீட்டின் ரேங்கின் மதிப்புகளாவன:

  • 2-10 முக மதிப்பு
  • 10-கே  10 புள்ளிகள்
  • ஏஸ்: 1 புள்ளி
  • ஜோக்கர்: 0-20 புள்ளிகள் ( விளையாட்டைப் பொறுத்து)

ரம்மி விதிகளில் ஸ்கோரிங் ஜோடி சேராத சீட்டுக்களின் மதிப்புக்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.

  • சுற்றின் முடிவில் ஒரு நபர் அனைத்துச் சீட்டுக்களையும் ஜோடி சேர்த்தப்பின்னர் ஒவ்வொரு ஆட்டக்காரரும் தங்களின் ஜோடி சேர்ந்த சீட்டுக்களின் புள்ளிகளைச் சேர்ப்பார்கள் (இதில் ஜோடிகளும், ரன்களும் அடங்கும்).
  • ஜோடி சேராத சீட்டுக்களிலிருந்து நீங்கள் புள்ளிகளை கழிக்க வேண்டும் (ஜோடி சேராத சீட்டுக்களின்)
  • வென்றவருக்கு வெற்றி பெற்றதன் பொருட்டு போனசும் கூட கிடைக்கலாம்.
  • ஒருவேளை ஜோடி சேர்ந்த சீட்டுக்களின் மதிப்பை விட ஜோடி சேராத சீட்டுக்களின் மதிப்பு அதிகம் என்றால் உங்களுக்கு பாதகமான ஸ்கோர் கிடைக்கலாம்.
  • பொதுவாக விளையாட்டானது ஒரு ஆட்டக்காரர் நிலைத்தத் தொகையை அடையும் வரைத் தொடரும்.

ரம்மி சீட்டு விளையாட்டில் ஸ்கோரிங் விதிகள்

வென்றவரைத் தவிர இதர ஆட்டக்காரர்கள் பின்வருமாறு புள்ளிகளைப் பெறுவார்கள்:

  • இரண்டு வரிசைகள் இல்லாவிட்டால் ஆட்டக்காரருக்கு கைகளிலுள்ள சீட்டுக்கள் அனைத்திற்கும் புள்ளிகள் கிடைக்கும் (அதிகபட்சம் 80 புள்ளிகள்)
  • இரண்டு வரிசைகள் இருந்து ஒன்று தூய வரிசையாக இருந்தால் ஆட்டக்காரருக்கு ஜோடி சேராத சீட்டுக்களின் புள்ளிகள் மட்டுமே கிடைக்கும் (செட்டிலோ, வரிசையிலோ சேராத)
  • தவறான பிரகடனம் – 80 புள்ளிகள்
  • ஆட்டக்கார தொடர்ந்து மூன்று முறை ஆடாவிட்டால் அவர் தானாகவே இழப்பிற்குள்ளாகிறார். கைகளிலுள்ள அனைத்து சீட்டுக்களுக்கும் புள்ளிகளாக சேர்க்கப்படும்.

வெற்றிப் பெற்றவரின் புள்ளிகளை எண்ணுவது எப்படி?

ரம்மி சீட்டு விளையாட்டில் வென்றவரின் புள்ளிகள்/வெற்றிகள் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு மாதிரியாகக் கணக்கிடப்படுகிறது. அடிப்படை ரம்மி விதிகளில் – இழப்பரின் புள்ளிகளின் அடிப்படையில் வென்றவர் ரொக்கத்தைப் பெறுகிறார்.

குழுவாக ஆடும் ரம்மியில்
வென்றவருக்கு இழந்தவர்கலின் (நுழைவுக்கட்டணம்) கிடைக்கும். எடுத்துக்காட்டாக, ரூ. 50 நுழைவுக்கட்டணமாகச் செலுத்தி 6 ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள் என்றால் பரிசுத் தொகையின் அளவு ரூ 300 ஆகிறது.

டீல்ஸ் ரம்மியில்
ஓவ்வொரு சுற்றின் முடிவிலும் வென்றவர் அனைத்துச் சிப்களையும் பெறுகிறார். ஒரு சிப் என்பது 1 புள்ளியாகும்,
எடுத்துக்காட்டாக, மேசையில் ஆறு ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள். தோற்கும் ஆட்டக்காரர்களின் புள்ளிகள் முறையே 15,20,25,30 மற்றும் 35. வென்றவரின் சிப்கள் 15+20+25+30+35=125 புள்ளிகளாகும்.

Excited to learn about rummy rules?
Want to play and earn cash? Rummy is one such game on GetMega. With 10,000+ daily players on the app, you can win up-to Rs 1,00,000 everyday. Download the GetMega Rummy now!

1,2,3 அடுக்கில் ரம்மி

சீட்டுக்கட்டுகளில் வெவ்வேறு வகைகள் வெவ்வேறு எண்களைப் பயன்படுத்துகின்றன. அடிப்படை ரம்மி 1 சீட்டுக்கட்டைப் பயன்படுத்துகிறது. இந்திய ரம்மி 2-3 கட்டுக்களைப் பயன்படுத்துகிறது. இரண்டு ஆட்டக்காரர்கள் இருந்தால் இரண்டு கட்டுக்கள் இருக்கும்.

இந்திய ரம்மியில் 13 சீட்டுகள் உள்ளன. ஆட்டக்காரர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து சீட்டுக்கட்டுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது (இரண்டு ஆட்டக்காரர்களுக்கு இரண்டு கட்டுக்கள், இருவருக்கு அதிகமான எண்ணிக்கை என்றால் 3 கட்டுக்கள்.

ரம்மியில் கைகளிலுள்ள சீட்டுக்களும் அவற்றின் விதிகளும்?

ரம்மி விளையாடும் உங்கள் கைகளே உங்களின் வெற்றித் தோல்விகளை தீர்மானிக்கின்றன. கைகளிலுள்ள சீட்டுக்களை மேம்படுத்தும் பணியை உங்கள் கரங்களே செய்யும். மேலும் தேவையற்ற சீட்டுக்களை இறக்கவும் செய்யும். இப்பிரிவில் ரம்மியில் பலவகையான கைகளின் பணியைப் பார்ப்போம்.

வரிசையை அமைத்துக் கொள்வது எப்படி?

  • ரம்மியில் இரண்டு வகையான வரிசைகள் உள்ளன – தூய வரிசை மற்றும் தூய்மையற்ற வரிசை.
    தூய வரிசை: இதில் ஜோக்கர்/வைல்ட்கார்ட் இருக்காது. எனவே தூய வரிசை (எ.கா- 5♥ 6♥ 7♥)
  • தூய்மையற்ற வரிசை – இதில் ஜோக்கர்/வைல்ட்கார்ட் இருக்கும். அதாவது 5♠ Q♥ 7♠ 8♠ Joker அல்லது 6♦ 7♦ 3♥ 9♦- இதுதான் வைல்ட் கார்ட் 3 ♥
    நீங்கள் வெற்றி பெற குறைந்தது ஒரு தூய வரிசையாவது இருக்க வேண்டும்.
    ரம்மி விதிகளின்படியும் கூட ஆட்டத்தில் வெல்வதற்கு நீங்கள் செல்லுபடியாகும் ஜோடிகளைச் சேர்க்க வேண்டும். எடுத்துக்காட்டுகள்-

1.A♥ A♣ A♦ வரிசை
2.4♦ 4♣ 4♠ 4♥
3. 9♦ 3♥ 9♠ 9♥ (3♥ என்பது வைல்ட்கார்ட்)
4. 5♦ 5♣ 5♠ Joker (5♥ பதிலாக ஜோக்கர் பயன்படுத்தப்பட்டுள்ளது )
5. 5♦ 5♣ 3♥ Joker (இங்கு வைல்ட்கார்ட் 3♥ 5♠ பதிலாக இருக்கிறது & ஜ

ோக்கரானது 5♥ பதிலாக இருக்கிறது)
எடுத்துக்காட்டாக: 4♥ 5♥ 6♥ 7♥| 5♣ 6♣ 7♣ 8♣ | 5♦ 5♣ ஜோக்கர் Q♥ Q♠ (Q♠ என்பது மற்றொரு வைல்ட்கார்ட் – 13 சீட்டுகளின் ஜோடியை நிறைவு செய்ய 5 சீட்டுகள் கொண்ட ஜோடிகள் உருவாக்கப்படுகின்றன.
இது செல்லுபடியாகாத பிரகடனம். ஏனெனில் 5♣ சீட்டு இரண்டு ஜோடிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு ஜோடியில் நான்கிற்கும் மேற்பட்ட சீட்டுக்கள் இருக்கலாம். உங்களிடம் நான்கு சீட்டுக்கள் கொண்ட ஜோடி இருந்தால் கூடுதலாக ஒரு ஜோக்கரைச் சேர்த்து அதை 5 சீட்டுக்கள் கொண்ட ஜோடியாக மாற்றலாம்,
செல்லுபடியாகாத ஜோடி

  1. K♥ K♥ K♦ (ஒரே ♥ சூட்டின் இரண்டு கே முகப்புடைய சீட்டுக்கள் இருப்பதால்)
  2. 7♠ 7♥ 7♦ 7♠ Q♥ (வைல்ட் கார்ட் Q♥ செல்லுபடியாகும் ஆனால் இரண்டு 7♠ அதனை செல்லுபடியாகாமல் செய்கின்றன.)

9 சீட்டுக்கள் ரம்மி என்றால் என்ன?

9 சீட்டு ரம்மி இந்தியாவில் கிட்டி என பிரபலமாக கூறப்படுகிறது. அது 2 முதல் 5 ஆட்டக்காரர்கள் வரையில் ஒன்பது சீட்டுக்களுடன் ஆடப்படுகிறது.

இந்த ஆட்டத்தில் முறையே ஒவ்வொரு ஜோடியிலும் 3 சீட்டுக்களைக் கொண்டு 3 ஜோடிகளை அமைக்க வேண்டும். ஒருமுறை சீட்டுக்களை அடுக்கி விட்டால் ஒரெ ஜோடி சீட்டுக்களைக் காண்பிக்க வேண்டும். உங்களது ஜோடி இதர ஆட்டக்காரர்களின் சீட்டுக்களுடன் ஒப்பிடப்படும். முதல் முறையாகக் காண்பிக்கும்போது உங்கள் கைகளிலுள்ள உயர் மதிப்புடைய சீட்டை நீங்கள் இறக்க வேண்டும். முக்கிய இலக்கு என்பது அதிக எண்ணிக்கையில் ஜோடி சீட்டுக்களை இதர ஆட்டக்காரர்கள் இறக்கிய சீட்டுக்களை வெல்வதாகவே இருக்கும்.

ரம்மியில் ஜோக்கரின் விதிகளும் வரிசைகளும்

ரம்மி விதிகளில் இரண்டு வகையான ஜோக்கர்களுண்டு. முதல் வகை அச்சடிக்கப்பட்ட சீட்டு (ஒரு சீட்டு கட்டிற்கு 1 என). இரண்டாவது வகை (வைல்ட்கார்ட் என்றும் அழைக்கப்படுகிறது) ஆட்டத்தின் துவக்கத்தில் தோராயமாக தேர்வு செய்யப்படுகிறது.

எடுத்துக்காட்டாக – இப்போது ஹார்ட்டின் 3 ஜோக்கராக (வைல்ட் கார்ட்) தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதர 3 இலக்கம்மிட்டச் சீட்டுக்கள் (ஸ்பேட், க்ளப்ஸ் மற்றும் டைமண்ட் ஆகியன) ஜோடி சேர்ப்பதற்கான இயல்பான சீட்டுக்களாக பயன்படுகின்றன.

இரண்டு வகையான ஜோக்கர்களின் பணியும் ஒன்றுதான். ஜோடி சேர்க்கும்போது ஜோக்கர்கள் ஒரு குறிப்பிட்ட சீட்டைப் பிரதிநிதித்துவம் செய்ய வெற்றுச் சீட்டுக்களாக கருதி பயன்படுத்தப்படுகின்றன.

ரம்மியில் ஜோக்கரின் வரிசை

  • தூய வரிசை: ஜோக்கர் இடம்பெறாத வரிசை
    தூய்மையற்ற வரிசை-
  • ஜோக்கருடன் கூடியது

ரம்மியீன் கடைசி சீட்டு விதி

ரம்மியின் வெவ்வேறு வடிவங்களில் இந்த கடைசி சீட்டு விதி பொருந்துகின்றது. இவ்விதியினாது ஆட்டத்தை சிறிதளவு கடினமாகவும், ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் செய்கிறது. விதியின்படி உங்கள் கைகளில் இருக்கும் கடைசி சீட்டை நீங்கள் இறக்க வேண்டும்.

இது ஆட்டத்தை மேலும் தந்திரமாக்குகிறது.
எடுத்துக்காட்டாக, உங்கள் கைகளில் 7♦ 8♦ ஆகிய சீட்டுக்கள் மட்டுமே இருக்கின்றபோது 9♦ உங்களுக்கு கிடைக்கிறது. ஆனால் இப்போது நீங்கள் ஏதேனும் ஒரு சீட்டை இறக்க வேண்டும். எனினும் நீங்கள் கையிலுள்ள இரண்டு செல்லுபடியாகாத வரிசையிலிருந்து இறக்கினால் வெற்றி பெற இயலாது. இந்த விதியின்படி வெற்றி பெறும் ஆட்டக்காரருக்கு கூடுதலாக 10 புள்ளிகள் கிடைக்கும்.

ரம்மியில் ஏஸ்களின் பலன்கள்

ஏஸ் சீட்டானது ரம்மியில் தனித்தொரு சீட்டாகும். அது அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச ரேங்க்காக விளங்கும்.
ஏஸ் சீட்டு ஒன்றைப் பெறுவது என்பது அதிகபட்ச வாய்ப்புள்ள ஒன்றாகும். ஏனெனில் பல ஆட்டக்காரர்கள் உயர் மதிப்புடைய சீட்டுக்களை உடனடியாக இறக்கி விடுவார்கள்.

ரம்மியில் ஏசஸ்

டிஸ்கார்ட் பைல்லில் இருந்து நீங்கள் ஒரு ஏஸ் சிட்டை எடுத்துக்கொண்டால் நீங்கள் ஏஸ், 2 மற்றும் 3 அல்லது க்யூ, கே மற்றும் ஏஸ் வரிசையை அமைக்கிறீர்களா என புரிந்து கொள்ள முடியாது. ஆகையால் அடுத்தவரின் வரிசையை அமைக்கும் உத்தியை கண்காணிப்பதும், அவர்களுக்கு தேவையான சீட்டுக்களை கைகளில் வைத்திருப்பதும் இங்கே பலன் அளிக்காது.

ப்ளோட்டிங் மற்றும் டோமினோ ரம்மி

ரம்மி விதிகளில் ப்ளோட்டிங் செய்வது என்றால் ஒரு ஆட்டக்காரர் தனது சீட்டுக்களை அனைத்தையும் கைகளில் வைத்துக்கொண்டு  எந்தவொரு சீட்டையும் இறக்க முடியாமல் இருந்தால் அது ஆட்டைத்தை முடிக்க முடியாது.

இதுவே ப்ளோட்டிங் அதாவது எந்தவொரு சீட்டையும் வைத்திருக்க இயலாத நிலை எனப்படுகிறது.
டோமினோ ரம்மி – டோமினோக்களின் புள்ளிகளைக் கொண்டு சீட்டுக்கள் இருந்தாலும் ரம்மி போல ஆடப்படும் விளையாட்டே டோமினோ ரம்மி எனப்படுகிறது. இந்த ஆட்டமானது 54 சீட்டுக்களுடன் விளையாடப்படுகிறது. அதில்:

10 – 2ஆம் இலக்கங்கள்
12- 3 ஆம் இலக்கங்கள்
12 – 4 ஆம் இலக்கங்கள்
10 – 5 ஆம் இலக்கங்கள்
2- 10 ஆம் இலக்கங்கள்
6- ஸ்பேட் ராணிகள்
2 ஜோக்கர்கள் இருக்கின்றன.

ஆட்டக்காரர்கள் ஒவ்வொருவருக்கும் 4 சீட்டுக்கள் கிடைக்கும்.


எப்படி விளையாடுவது

  1. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சீட்டுக்களை டெக்கிலிருந்தோ அல்லது டிஸ்கார்ட் பைல்லில் இருந்தோ எடுத்துக்கொள்ளவும்.
  2. கைகளிலுள்ள சீட்டுக்களில் ஒன்றை மேசையின் மீது இறக்கவும்
    ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ராணி சீட்டுக்களை இதர ஆட்டக்காரர்களின் மீது வெட்டி விளையாடும் வாய்ப்பும் உண்டு. (ஒவ்வொரு ராணிக்கும் ஒவ்வொரு சீட்டு) இது இரண்டு சீட்டுக்களையும் இறக்கி விட உதவும்.
  3. மேசையின் மீது ஒரு ஆட்டக்காரர் 4 சீட்டுக்களுடன் இருக்கும் நிலையில் சுற்றானது முடிவடையும்.


ஸ்கோரிங்:
வென்றவருக்கு 4 சீட்டுக்களின் மொத்த மதிப்பு கிடைக்கும்
ஆட்டக்காரர் வெளியேறினால் கூடுதலாக 5 புள்ளிகள்
சீட்டுக்கள் 2-3-4-5 என்றால் கூடுதலாக 5 புள்ளிகள்
சீட்டுக்கள் ஒரே வகையில் நான்காக இருந்தால் கூடுதலாக 10 புள்ளிகள்
கைகளில் இருக்கும் சீட்டுக்களின் மதிப்பு கழிக்கப்படுகிறது.

ஒவ்வொரு சுற்றிலும் அதிகபட்ச புள்ளிகள் கொண்ட ஆட்டக்காரர் வெல்வார். ரம்மி சுற்றுக்கள் எந்தவொரு ஆட்டக்காரரும் 100 புள்ளிகளை எட்டும் வரை நிகழ்கின்றன.

ரம்மியில் சிப்ஸ்கள்

டீல்ஸ் ரம்மி என்பது சிப்களைப் பயன்படுத்தும் ரம்மியின் வேறு வடிவமாகும்.
இந்த விளையாட்டில் ஆட்டத்தின் துவக்கத்

தில் ஆட்டக்காரர்கள் சிபகளைப் பெறுகிறார்கள். எவ்வளவு எண்ணிக்கையிலான டீல்கள் என்பது முன் கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு சுற்று/டீல்களின் இறுதியில் வெல்பவருக்கே அனைத்து சிப்களும் கிடைக்கும். அனைத்துச் சுற்றுக்களும் நிறைவடையும்போது அதிகபட்ச சிப்களுடன் இருப்பவரே வென்றவர் ஆவார்.

சிப்களைத் தவிர இதர ரம்மி வடிவங்களைப் போலவே மீதமுள்ள விளையாட்டு ஆடப்படுகிறது. இதை 2 லிருந்து 6 பேர் வரை பொதுவாக விளையாடுகிறார்கள். அதில் 53 சீட்டுக்கள் (52+1 ஜோக்கர்) கொண்ட சீட்டுக்கட்டு பயன்படுத்தப்படுகிறது.
ஸ்கோரிங் ரம்மி விளையாட்டு விதிகள் போன்றது. வெற்றி பெறுபவர் தோற்கும் ஆட்டக்காரர்களின் ஸ்கோர் விகிதத்தின் அடிப்படையில் சிப்ஸ்களைப் பெறுகிறார்.

இத்துடன் அடிப்படை ரம்மி விதிகள் நிறைவடைகின்றன. கெட்மெகாவில் நீங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் விளையாடத் துவங்கலாம்.

ரம்மி சீட்டு விளையாட்டில் விரைவாக வெற்றி பெற டிப்ஸ்கள்

ரம்மியின் விதிகளை தீர்மானிப்பது முக்கியமானது. ஆனால் அது புத்திசாலித்தனத்துடன், எப்படியாகவேனும் வென்று விட வேண்டும் என்பதும் அவசியம். இங்கு சில விரைவான ரம்மி உத்திகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை உங்கள் போட்டி ஆட்டக்காரர்களை தோற்கடித்து நீங்கள் வெற்றி பெற உதவும்.

ஆட்டத்தின் துவக்கத்தில் தூய வரிசை ஒன்றை உருவாக்கவும். இதை ச் செய்யாமல் வெற்றி பிரகடனம் செய்வதற்கு வாய்ப்பில்லை.
உயர் மதிப்பு கொண்ட சீட்டுக்களை இறக்கி விடுவது அவசியம். ஏஸ், ஜாக், கிங், குயின் ஆகியன அதிக மதிப்புடைய சீட்டுக்களின் கீழ் வருகின்றன. நீங்கள் தோற்க நேர்ந்தால் அப்படிச் செய்வது உங்கள் புள்ளிகளைக் குறைக்க உதவும்.

இறக்கி விடப்பட்டச் சீட்டுக்களிலிருந்து சீட்டை எடுப்பதை சாத்தியப்படும் வரையில் தவிர்க்கவும். அது எந்தமாதிரியான சேர்க்கைகளை செய்கிறீர்கள் என்பதைக் காட்டிக் கொடுத்துவிடும்.
சிறந்த சீட்டுக்களுக்காக காத்திருக்கவும். எந்தவொரு சூட்டிலும் 7 எனும் சீட்டு அதே சூட்டின் 5 மற்றும் 6 எண்களுடன் இணையும். அதே போல 8 மற்றும் 9 ஆகியவற்றுடனும் இணையும்.

ரம்மியில் ஜோக்கர்களின் பங்கு மிக முக்கியமானது. இந்த மாற்றுத் திறன் கொண்ட உயர் மதிப்புடையச் சீட்டுக்களைப் பயன்படுத்தவும். நினைவில் கொள்ளுங்கள். தூய வரிசையை உருவாக்க ஜோக்கர் அல்லது வைல்ட் கார்டுகளை நீங்கள் பயன்படுத்த இயலாது.
பிரகடனத்தை வெளியிடும் முன்னர் சரிபார்த்துக்கொள்வது மிக அவசியமானது. முறையற்ற பிரகடனம் வெற்றிப் பெற வாய்ப்புள்ள ஆட்டத்தை மொத்தமாக தோற்கின்ற ஒன்றாக ஆக்கிவிடலாம்.
ஹோல்ட் தெம் போக்கர் உட்பட 12+ ஆட்டங்கள் கெட்மெகாவில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு நாளும் 10,000+ ஆட்டக்காரர்களுடன் ரூ 1,00,000 வரை வெல்லும் வாய்ப்புள்ளது. கெட்மெகாவை இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள்!

GetMega has 12+ games on the app including Hold'em Poker. With 10,000+ daily players on the app, you can win up-to Rs 1,00,000 everyday. Download the GetMega Hold 'em Poker now!
Title Slug
இந்தியன் ரம்மி என்றால் என்ன: பொருள், அமைப்பு, விதிகள், விளையாட்டு மற்றும் பல indian-rummy-tamil
What Are Different Types Of Rummy Games: Learn All Rummy Variants Here rummy-variants
Top 10 Rummy Tricks tips-tricks-in-rummy
0

GET ₹17000 BONUS, Use Code: JONTYRHODES

paytm
Poker